
தமிழக பட்ஜெட்டில் ரூ.90 கோடி மதிப்பீட்டில் புதிதாக 5 அரசு ஐடிஐ-க்கள் தொடங்கப்படும் என்றும், ஐடிஐ-க்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரவழிக் கற்றல் பாடப்பிரிவு அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.10 கோடி செலவில் தொடங்கப்படும் இந்த புதிய தொழிற்பிரிவு, அடுத்த 5 ஆண்டுகளில் 50 ஐடிஐ-க்களில் விரிவுபடுத்தப்பட்டு, 24 ஆயிரம் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்படும்.
இளைஞர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.