/polimer-news/media/media_files/2026/11/02/cmvijayroadshow-2026-11-02-12-04-34.jpg)
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நாளை நடைபெறும் விழாவில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு 13 மாவட்டங்களைச் சேர்ந்த 9 ஆயிரம் மகளிருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
மகளிர் சுய உதவி குழு மூலமாக 1,110 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் ஈரோடு, கரூர், திருப்பூர், நாமக்கல், கோவை மற்றும் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வழங்கப்பட உள்ளன.
சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்து சாலை மார்க்கமாக பெருந்துறை வரும் முதலமைச்சரின் வருகையை ஒட்டி மொத்தம் 7 இடங்களில் ரோடு ஷோ நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.