
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பத்தாம் ஆண்டை முன்னிட்டு ரூ.300 கட்டணத்தில் 'ஜியோ பிரைம்' சந்தா திட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்துள்ளது.
இந்தத் திட்டத்தில் சேரும் பயனர்களுக்கு செப்டம்பர் 5, 2027 வரை தற்போதைய ரீசார்ஜ் கட்டணத்திலேயே சேவைகளைப் பெற முடியும் என்ற உத்தரவாதத்தை நிறுவனம் வழங்கியுள்ளது.
கூடுதலாக ரூ.600 கேஷ்பேக் சலுகையாக சிம் கார்டு மற்றும் ஜியோ ஹோம்/பிசி இணைப்புக்கான தலா ரூ.300 வவுச்சர்களை ஜியோ அறிவித்துள்ளது.