
ஆகஸ்ட் 1-ம் தேதி கோவை, திருநெல்வேலி, நீலகிரி, தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சோலையாரில் 10 செமீ, சின்கோனா, உபாசி, வால்பாறையில் தலா 8 செமீ, சின்னக்கல்லாரில் 6 செமீ மற்றும் பெரியாறு, பந்தலூரில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆகஸ்ட் 1-ம் தேதி மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வெப்பநிலை 82 முதல் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.