
ஸ்பெயினில் நடைபெற்ற லா லிகா கால்பந்துப் போட்டியில் பார்சிலோனா எஃப்சி அணி 5-2 என்ற கோல் கணக்கில் ரியல் பெட்டிஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் ஒரு கோல் அடித்து ஒரு அசிஸ்ட் செய்த லமின் யமால் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
நடப்பு சீசனில் விளையாடிய 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள பார்சிலோனா அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.