
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டின் சாதனையை முறியடித்து, விக்கெட் கீப்பர் அல்லாத வீரர்களில் அதிக கேட்ச்களைப் பிடித்தவர் என்ற மைல்கல்லை ஸ்மித் எட்டியுள்ளார்.
தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் பெடிங்ஹாமை கேட்ச் பிடித்ததன் மூலம் ஸ்மித்தின் டெஸ்ட் கேட்ச்களின் எண்ணிக்கை 221 ஆக உயர்ந்தது.