
லடாக்கின் பூகா பள்ளத்தாக்கில் 1,000 மீட்டர் ஆழத்தில் புவிவெப்பக் கிணறுகளைத் தோண்டி, இந்தியா தனது முதல் 1 எம்.வி. முன்னோடி மின் நிலையத்தைத் தொடங்கியுள்ளது.
நிலக்கரியைச் சார்ந்திருப்பதை குறைக்கும் நோக்கில், 24 மணிநேரமும் தடையின்றி மின்சாரம் வழங்கும் இந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டத்தை ஓஎன்ஜிசி செயல்படுத்தியுள்ளது.
2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மின் தேவை 2,170 டெராவாட்டாக உயரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், புவிவெப்ப ஆற்றல் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும்.