
சென்னையில் சிறப்புக் குழந்தைகள் தங்களுடைய திறமைகள் மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட 'புன்னகை 2026' நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகைக் கூட்டரங்கில் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி கடந்த 25 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் மூலம் சமூகத்தில் அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவ உணர்வு வளர்க்கப்படுவதுடன், சிறப்புக் குழந்தைகளுக்கு வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.