
கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் போதைப்பொருள் கும்பலால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாணவன் அமுதன் போதைப்பொருள் விபரங்களை காவல்துறையிடம் கூறிய நிலையில், அந்த ரகசியத்தை காவல்துறையினர் போதைப்பொருள் கும்பலிடம் கசியவிட்டதே மரணத்திற்கு காரணம் என குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
சட்டமன்றத்தில் அமைச்சர் நிர்மல்குமார் உண்மையை மூடிமறைத்து இது வெறும் மாணவர் மோதல் எனப் பேசியுள்ளதாகவும், அரசு இந்த வழக்கை நேர்மையாக விசாரிக்க வேண்டும் எனவும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.