
ஈரான் போரில் அமெரிக்கா 850-க்கும் மேற்பட்ட டோமாஹாக் ஏவுகணைகள் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட பேட்ரியாட் ஏவுகணைகளை இதுவரை பயன்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவிடம் ஆயுதங்கள் குறைந்து வருவதாக வெளியான செய்திகளை வெள்ளை மாளிகை மறுத்துள்ள நிலையில், ஈரான் தொடர்ந்து பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈரான் விவகாரத்தில் அதிபர் ட்ரம்ப் அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து அடிக்கடி பேசி வருவது, அமெரிக்காவின் ஆயுத கையிருப்பு குறித்த சந்தேகங்களை அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.