
பெங்களூருவில் நடைபெறும் துலீப் டிராபி கால் இறுதிப் போட்டியில், வடக்கு மண்டல அணிக்காகக் களமிறங்கிய அன்ஷுல் கம்போஜ் 52 பந்துகளில் 60 ரன்கள் குவித்து அசத்தினார்.
9-வது வீரராகக் களமிறங்கிய கம்போஜ், 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்களுடன் 115.38 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி அணியின் ஸ்கோரை 251 ரன்களாக உயர்த்த உதவினார்.
மேற்கு மண்டல அணி தரப்பில் துஷார் தேஷ்பாண்டே மற்றும் தனுஷ் கோட்டியான் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், முதல் நாள் முடிவில் மேற்கு மண்டலம் 31/2 ரன்களில் உள்ளது.