
ஆகஸ்ட் 4 அன்று தாய்லாந்தின் புக்கெட்டில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானம் நடுவானில் 300 அடி கீழே இறங்கியதால் 17 பயணிகள் காயமடைந்தனர்.
விசாரணையில் விமானத்தின் கேப்டன் கஞ்சா வகை போதைப்பொருள் உட்கொண்டது கண்டறியப்பட்ட நிலையில், அவர் தூக்கமின்மைக்காக மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளைப் பயன்படுத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
விமான விபத்து விசாரணை ஆணையம் நடத்திய விசாரணையில், கேப்டன் விமானப் பயணத்தின்போது 30 முதல் 35 நிமிடங்கள் தூங்கியது மற்றும் விதிமுறைப்படி மருந்து விவரங்களை தெரிவிக்காதது தெரியவந்துள்ளது.