வீட்டு பயன்பாட்டுக்கான சூரிய மின்சக்தி திட்டத்துக்கு மத்திய-மாநில அரசுகளின் இணைந்த மானியம் குறித்த அறிவிப்பு வெளியான இரண்டு வாரங்களில் 20,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
தமிழகத்தில் இதுவரை ஒரு லட்சம் வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மேலும் ஒரு லட்சம் வீடுகளின் மேற்கூரைகளில் சோலார் பேனல்களைப் பொருத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் மின்சாரத் தேவையைச் சமாளிக்க கொள்முதல் செய்வதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளதாகவும், பேட்டரிகளில் மின்சாரத்தைச் சேமிப்பது தொடர்பான கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.