
சூடானின் தெற்கு கார்டோபன் மாகாணத்தில் உள்ள குவார்டாட் மற்றும் அபு ஹமாமா கிராமங்களில் ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர்.
சூடான் மக்கள் விடுதலை இயக்கம் என்ற கிளர்ச்சியாளர்கள் அமைப்பு நடத்திய இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 4 குழந்தைகளும் அடங்குவர்.
2023 ஏப்ரல் 15 முதல் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே மோதல் நீடிக்கும் நிலையில், தற்போது அப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.