
சர்க்கரை மற்றும் பால் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வால், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு கிலோ பால்கோவாவின் விலை ரூ.80 அதிகரித்து தற்போது ரூ.400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உற்பத்திச் செலவு கணிசமாக அதிகரித்துள்ளதால், சிறு மற்றும் குறு உற்பத்தியாளர்கள் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்தால், வரும் நாட்களில் பால்கோவாவின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.