
இந்தியாவில் இஸ்லாமியர்கள் இருக்கக்கூடாது என்று கருதும் எவரும் உண்மையான இந்துவாக இருக்க முடியாது என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நியூயார்க்கில் தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அமெரிக்கா மற்றும் கனடா பயணம் மேற்கொண்டுள்ள மோகன் பகவத், நியூயார்க்கில் நடைபெற்ற மதத் தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றினார்.
வேற்றுமையில் ஒற்றுமையைக் காண்பதே இந்துத்துவத்தின் அடிப்படை கொள்கை என்றும், கிருஷ்ண பக்தி மூலம் உலகில் உள்ள பிரிவினைகளுக்கு தீர்வு காணலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.