
உலகப் பணக்காரரும் எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க், இன்ஸ்டாகிராம் செயலி குறித்து மீண்டும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் செயலியை நீக்கிவிட்டதாகவும் அது இயல்பாகவே ஒரு பெண் செயலி என்றும் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்ட கருத்துக்கு எலான் மஸ்க் 'இன்ஸ்டாகிராம் பெண்களுக்கான செயலி' என பதிலளித்துள்ளார்.
முன்னதாக கடந்த மே மாதத்திலும் சில ஆண்களின் இன்ஸ்டாகிராம் பயன்பாடு குறித்து அவர் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.