
பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் இன்று தொடங்கிய எப்ஐஹெச் ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் தலா 16 அணிகள் பங்கேற்கின்றன.
ஆடவர் பிரிவில் ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் லீக் ஆட்டத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு வேல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெறும் இந்தத் தொடரின் இறுதிப் போட்டிகள் ஆடவர் பிரிவுக்கு 30-ம் தேதியும், மகளிர் பிரிவுக்கு 29-ம் தேதியும் நடைபெறுகின்றன.