
அமெரிக்காவில் 2025-ம் ஆண்டில் கொலை மற்றும் வன்முறைக் குற்றங்கள் வரலாற்றுச் சரிவை எட்டியுள்ளதாக FBI இயக்குநர் காஷ் படேல் தெரிவித்துள்ளார்.
தேசிய அளவில் ஒரு லட்சம் பேருக்கு 4.1 கொலைகள் என்ற விகிதத்தில் குற்றங்கள் குறைந்துள்ளதாகவும், 2022-ம் ஆண்டிலிருந்து கொலைகள் பாதிக்கும் கீழாக சரிந்துள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.
வெறுப்புக் குற்றங்கள் 7% குறைந்து 10,606 ஆக உள்ள நிலையில், கடமையில் இருந்த 53 சட்ட அமலாக்க அதிகாரிகள் 2025-ம் ஆண்டில் கொல்லப்பட்டுள்ளனர்.