
அமெரிக்காவில் நடைபெற்று வரும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில், நடப்பு சாம்பியன் இகா ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
நேற்றிரவு நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பிரான்ஸ் வீராங்கனை டியானே பேரியை வீழ்த்தினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்ஸ் 6-3, 6-4 என்ற நேர் செட்டில் டேனியல் மெரிடாவைத் தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.