
இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜோ ரூட் இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் 23,000 ரன்களை எட்டி புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்த மைல்கல்லை அடைய ஜோ ரூட் 521 இன்னிங்ஸ்களை எடுத்துக் கொண்டு, 522 இன்னிங்ஸ்களில் எட்டிய சச்சின் தெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 23,000 ரன்களை வேகமாக கடந்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி (490 இன்னிங்ஸ்கள்) முதலிடத்தில் இருக்க, ஜோ ரூட் மற்றும் சச்சின் தெண்டுல்கர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.