
அமெரிக்கப் பத்திர வட்டி விகித உயர்வு மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற சூழலால் இந்தியப் பங்குச்சந்தை கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடுமையாகச் சரிந்தது.
ஒரே நாளில் சென்செக்ஸ் 778 புள்ளிகள் குறைந்து 74,003 புள்ளிகளிலும், நிப்டி 279 புள்ளிகள் குறைந்து 23,118 புள்ளிகளிலும் நிலைபெற்றன.
இந்தச் சரிவின் காரணமாக முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.9 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.