International
புத்தர் பாதத்தில் கிளிசரின் ஊற்றிய தைவான் டிவி தொகுப்பாளர் கைது

புத்தர் பாதத்தில் கிளிசரின் ஊற்றிய தைவான் டிவி தொகுப்பாளர் கைது

Daily Thanthi2h
THE BRIEF
1

ஜப்பானின் நாரா நகரில் உள்ள கி.பி. 753-ஆம் ஆண்டைச் சேர்ந்த தேசிய பொக்கிஷமான புத்தர் பாதச்சுவடு கல்லின் மீது கிளிசரின் ஊற்றிய தைவான் தொகுப்பாளர் டிசாய் ஜென் கைது செய்யப்பட்டுள்ளார்.

2

கடந்த ஏப்ரல் மாதம் கோவிலுக்கு சுற்றுலா வந்தபோது இந்த செயலில் ஈடுபட்ட அவர், மீண்டும் ஜப்பானின் கான்சாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

3

புனித திரவங்களை ஊற்றி பிரார்த்தனை செய்வது தனது வழக்கம் என அவர் விசித்திரமான வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், ஜப்பானின் கலாச்சார சொத்துக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெறுகிறது.