விழுப்புரத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 'ஹெல்த்தி விழுப்புரம்' அமைப்பு சார்பில் செப்டம்பர் 12-ம் தேதி காலை 6 மணிக்கு சைக்கிளத்தான் போட்டி நடைபெறுகிறது.
13 வயதுக்குள், 18 வயதுக்குள் மற்றும் திறந்தநிலை என மூன்று பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்குத் தனித்தனியாகப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
போட்டியில் பங்கேற்க விரும்புவோர் ஆன்லைன் மூலமாகவோ அல்லது விழுப்புரம் ஸ்வர்ணாலயா நகை மாளிகை மற்றும் டர்ப்-32 விளையாட்டு அரங்கில் நேரடியாகவோ பதிவு செய்யலாம்.