அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பு படித்து வருகிறார் மாணவர் பாரதிதாசன்.
இரண்டாம் ஆண்டு உதவித் தொகை கிடைக்காததால் அவர் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டதுடன் எதிர்க்கட்சிகளும் குரல் எழுப்பின.
இதனைத் தொடர்ந்து மாணவர் பாரதிதாசனின் இரண்டாம் ஆண்டு கல்வி உதவித்தொகை தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது.