
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் 'டீப்ஃபேக்' வீடியோ மற்றும் குரல் பதிவுகள் மூலமான மோசடிகள் குறித்து இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் போலக் குரல் மற்றும் முகப்போலிகளை உருவாக்கிப் பணம் மற்றும் வங்கிக் கணக்கு விபரங்களைக் கேட்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் வந்தால் உடனடியாகப் பணத்தை வழங்காமல், வேறு நம்பகமான தொடர்பு ஊடகம் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும், பாஸ்வேர்ட் மற்றும் OTP எண்களைப் பகிர வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.