
பொருட்கள் எதையும் ஆர்டர் செய்யாமலேயே 'கேஷ் ஆன் டெலிவரி' முறையில் வீடுகளுக்கு பார்சல்களை அனுப்பி மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் பெண் எழுத்தாளரின் வீட்டிற்கு வந்த பார்சலை அவரது மகன் ஆர்டர் செய்ததாக நினைத்து ரூ. 1,299 செலுத்திப் பெற்றபோது, உள்ளே கிழிந்த குர்தா மட்டுமே இருந்தது தெரியவந்துள்ளது.
பார்சல்களைப் பெறும் முன்பு தாங்கள் ஆர்டர் செய்துள்ளோமா என்பதைச் சரிபார்க்க வேண்டும் என்றும், டெலிவரி சமயம் ஓடிபி மூலம் வங்கி கணக்குகள் ஹேக் செய்யப்படலாம் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.