Economy
பைனான்ஸ் கிரிப்டோ பரிவர்த்தனையில் ரூ.60,000 கோடி திருட்டு

பைனான்ஸ் கிரிப்டோ பரிவர்த்தனையில் ரூ.60,000 கோடி திருட்டு

Polimer News1h
THE BRIEF
1

உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நிறுவனமான பைனான்ஸில் இருந்து ஹேக்கிங் மூலம் 60 ஆயிரம் கோடி ரூபாய் திருடப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அதில் 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான டிஜிட்டல் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.

2

இந்தத் திருட்டில் வடகொரியாவைச் சேர்ந்த ஹேக்கிங் நபர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என்று பைனான்ஸ் நிறுவனம் சந்தேகம் தெரிவித்துள்ளதோடு, பயனாளர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளதாகவும் உறுதி அளித்துள்ளது.

3

குற்றவாளிகள் தாமாகவே அழித்துக்கொள்ளும் பொறிமுறையைப் பயன்படுத்தி தடயங்களை அழித்துவிட்டதால் அவர்களைக் கண்டறிவதில் சிக்கல் இருப்பதாக நிறுவனத்தின் இணை தலைமைச் செயல் அதிகாரி ரிச்சர்ட் டெங் கூறியுள்ளார்.