
மூன்றாம் தலைமுறை ஆடி Q3 எஸ்.யூ.வி. கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இது 2026 பண்டிகைக் காலத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கார் 200bhp பவர் மற்றும் 320Nm டார்க் திறன் கொண்ட 2.0-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வசதியுடன் வருகிறது.
இதன் விலை ரூ. 46 லட்சம் முதல் ரூ. 52 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இது பி.எம்.டபிள்யூ. X1 மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் GLA கார்களுக்குப் போட்டியாக அமையும்.