
உக்ரைன்-ரஷ்யா போருக்கான நிதியை திரட்ட, ஆபாசத் திரைப்படத் துறையை சட்டப்பூர்வமாக்கி அதன் மூலம் 25 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.236 கோடி) வரி வருவாய் ஈட்ட உக்ரைன் திட்டமிட்டுள்ளது.
இந்த நிதியைக் கொண்டு போருக்குத் தேவையான 30 ஆயிரம் ட்ரோன்களை வாங்க முடியும் என அந்நாட்டு நாடாளுமன்ற நிதிக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
2023-ஆம் ஆண்டில் மட்டும் 7,900 உக்ரேனியர்கள் ஒன்லிஃபேன்ஸ் தளம் மூலம் 131 மில்லியன் டாலருக்கும் அதிகமாக சம்பாதித்துள்ள நிலையில், அரசு இந்தத் துறையை முறைப்படுத்த முனைகிறது.