
அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (AI) தரவு மையங்களால் எதிர்காலத்தில் மெக்சிகோ நாட்டை விட அதிக கார்பன் உமிழ்வு உண்டாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சியாரா கிளப் வெளியிட்ட ஆய்வின்படி, 2030க்குள் அமெரிக்காவின் மின்சார உற்பத்தி துறையில் 2.1 பில்லியன் மெட்ரிக் டன் கார்பன் டை ஆக்சைடு உமிழப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
AI பயன்பாட்டை இயக்க பல இயற்கை எரிவாயு நிலையங்கள் கட்டப்படுவதால் கடந்த 15 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்ட கார்பன் உமிழ்வுகள் மீண்டும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.