
பஞ்சாப் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் ஷஷாங்க் சிங், சத்தீஸ்கர் அணியிலிருந்து விலகி அடுத்த உள்நாட்டு கிரிக்கெட் சீசனில் புதுச்சேரி அணிக்காக விளையாட உள்ளார்.
சத்தீஸ்கர் அணிக்காக 24 முதல் தரப் போட்டிகளில் 905 ரன்களும், 42 டி20 போட்டிகளில் 653 ரன்களும் எடுத்துள்ள அவர், 2023-24 பிசிசிஐ விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சத்தீஸ்கர் கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுடனான கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், புதுச்சேரி அணியில் ஒரு புதிய தொடக்கத்தை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.