
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னையில் வருகிற 10-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ராணுவ மேலாதிக்க நோக்கத்தாலும் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றும் நோக்கத்தாலும் நடக்கும் இப்போரினால் மேற்காசியாவில் போர் பதற்றம் நீடிப்பதோடு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடியதால் உலக நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், போரை நிறுத்த வலியுறுத்தி மத்திய பாஜக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.