
செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் புதிய ராக்கெட் தொழில்நுட்பம் தீவிரமாகத் தயாராகி வருவதாக கோத்தகிரியில் நடந்த கருத்தரங்கில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
குறைந்த செலவில் நவீன தொழில்நுட்பங்களுடன் ராக்கெட்டுகளை உற்பத்தி செய்தல் மற்றும் ஒருமுறை பயன்படுத்திய ராக்கெட்டுகளை மீண்டும் பயன்படுத்துவது உலக விண்வெளி வாரக் கருப்பொருளாக உள்ளது.
பூமியில் இருந்து 400 கி.மீ தொலைவில் விண்வெளி ஆய்வு மையம் இயங்கி வரும் நிலையில், நிலவில் மனிதர்களை இறக்கிய வெற்றியைத் தொடர்ந்து செவ்வாய் கிரகத்திற்கான திட்டங்கள் நடந்து வருகின்றன.