
வங்கதேசத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பரவி வரும் தட்டம்மை நோயால் இதுவரை 999 பேர் உயிரிழந்துள்ளனர்.
1.66 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், 1.46 லட்சம் நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
6 மாதங்கள் முதல் 5 வயது வரையிலான 1.8 கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் அவசரகால திட்டத்தின் கீழ் இதுவரை 1.97 கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.