வயது முதிர்வால் எலும்பு தசைகளின் வலிமை மற்றும் செயல்திறன் குறைவதை மருத்துவ மொழியில் 'சார்கோபீனியா' என்று அழைக்கப்படுகிறது.
இந்த பாதிப்பு 40 வயதில் தொடங்கி 60 வயதில் தீவிரமடையும் நிலையில், புரதச்சத்து மிகுந்த பால், மீன், முட்டை மற்றும் இறைச்சி உணவுகளை உட்கொள்வது அவசியம்.
தசை மற்றும் எலும்புகளின் அடர்த்தியை அறிய டெக்சா ஸ்கேன் எடுப்பதோடு, மருத்துவரின் பரிந்துரைப்படி உடற்பயிற்சி மற்றும் விட்டமின் டி சத்துக்களைப் பெற வேண்டும்.