
திண்டுக்கல் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 10-வது டிஎன்பிஎல் தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 16.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 131 ரன்கள் எடுத்தது.
சேப்பாக் அணியின் தொடக்க வீரர் நாராயண் ஜெகதீசன் அதிரடியாக விளையாடி 58 பந்துகளில் 90 ரன்கள் குவித்து, தனது அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார்.