
வரும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வடக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் 3 தீவிரப் புயல்கள் உருவாகக்கூடும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த முறை உருவாகும் புயல்களின் வேகம் இயல்பான சராசரியை விட ஆற்றல் விரயக்குறியீடு படி 83 சதவீதம் அதிகமாக அதாவது 13.06 மில்லியன் நாட்ஸ் அளவை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒடிசா, வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய கடலோரப் பகுதிகள் கடும் காற்று மற்றும் கனமழையால் அதிக ஆபத்தை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.