
ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான 'ரணபலி' திரைப்படம் 5 நாட்களில் உலகளவில் 52.40 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
விடுமுறை தினமான நேற்று மட்டும் அதிகபட்சமாக 6.75 கோடி ரூபாய் வசூலித்துள்ள இப்படம், இந்தியாவில் மட்டும் 42 கோடி ரூபாயைக் கடந்துள்ளது.
சுதந்திர போராட்டக் காலக்கட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் தெலுங்கு ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ள போதிலும், பான் இந்தியா அளவில் பெரிய வெற்றி பெறவில்லை.