
ஹரியானா மாநிலம் குருக்ராமில் உள்ள அடிடாஸ் நிறுவனத்தின் இந்தியா டெக் ஹப் மையத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 50 சதவீதத்தினரை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
இம்மையத்தில் பணியாற்றும் 700 ஊழியர்களில் 300 முதல் 350 வரையிலான ஊழியர்கள் பாதிக்கப்படக்கூடும் என்றும், மென்பொருள் மற்றும் தரவு பொறியாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட முதல் பிரிவினருக்கு செப்டம்பர் 15 அன்று பணி விடுவிப்புக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் பிரிவினருக்கு வரும் டிசம்பர் 15 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.