இலங்கையில் டெங்கு நுளம்புப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் செப்டம்பர் 14 முதல் 19 ஆம் திகதி வரை டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்ட 62 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளைப் பிரதான கேந்திர நிலையமாகக் கொண்டு இந்த விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை ஊழியர்கள், பொது சுகாதாரப் பரிசோதகர்கள், முப்படையினர் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் இதில் இணைந்துள்ளனர்.