
இந்திய கல்வி முறைக் குறைபாடுகள் குறித்து பேசி வரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சென்னை தீவுத் திடலில் நடைபெறும் மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று விமான நிலையம் வந்தார்.
பின்னர் நீலாங்கரையில் உள்ள முதல்-அமைச்சர் விஜய் இல்லத்திற்கு சென்ற ராகுல் காந்திக்கு மதிய உணவு விருந்து அளிக்கப்பட்டதோடு, தற்போதைய அரசியல் சூழல் குறித்து இருவரும் தனியாக ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனைக்குப் பிறகு இருவரும் ஒரே காரில் புறப்பட்டு பாலவாக்கத்தில் உள்ள கிரிக்கெட் வீரர் தோனிக்கு சொந்தமான உணவகத்திற்கு சென்று தேநீர் அருந்தினர்.