
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த மகளிர் டி20 காட்சி போட்டியில், டிஎன்சிஏ தலைவர் லெவன் அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்த டிஎன்சிஏ செயலாளர் லெவன் அணி 20 ஓவர்களில் 132 ரன்கள் எடுத்தது, நிதி அதிகபட்சமாக 34 ரன்களை எடுத்தார்.
வெற்றி இலக்கை துரத்திய தலைவர் லெவன் அணி 19.2 ஓவர்களில் 133 ரன்கள் எடுத்தது, கேப்டன் அர்ஷி சவுத்ரி 37 ரன்கள் விளாசினார்.