
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஷதமன் இஸ்லாம் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், 434 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அதிக விக்கெட் வீழ்த்திய இடது கை பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஸ்டார்க் படைத்தார்.
இதற்கு முன்பு இலங்கையின் ரங்கனா ஹெராத் 433 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் இருந்த நிலையில், அவரை முறியடித்து ஸ்டார்க் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
மேலும், இந்திய ஜாம்பவான் கபில்தேவின் 434 விக்கெட் சாதனையை ஸ்டார்க் சமன் செய்துள்ள நிலையில், இன்றைய 2-ம் நாள் ஆட்டத்தில் அவர் புதிய மைல்கல்லை எட்ட வாய்ப்புள்ளது.