
இயக்குநர் சேரன் இயக்கத்தில் ராமதாஸின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகவிருந்த 'அய்யா' திரைப்படம் கைவிடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
சுமார் ஒன்றரை ஆண்டுகள் இப்படைப்பிற்காக உழைத்த நிலையில், சில காரணங்களால் படம் நின்று போனது தனக்கு மிகுந்த வலியைத் தருவதாக அவர் கூறினார்.
சென்னையில் நடைபெற்ற திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சேரன், தற்போது சூழல் மாறியுள்ளதால் அப்படத்தை எடுக்க ஆள் இல்லை என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.