
தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா மற்றும் அவரது கணவர் உட்பட ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் இந்தக் கைது நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள கார்த்திகாவையும் அவரது கட்சியினரையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.