
நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மணிகண்டன் நடிக்கும் புதிய படத்திற்கு 'மக்கள் காவலன்' எனப் பெயரிடப்பட்டு அதன் முதல் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் சந்தோஷ் குமார் இயக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.
அதிகாரத்திற்கு எதிரான ஒரு மனிதனின் போராட்டத்தை மையமாகக் கொண்ட இப்படத்தின் போஸ்டரில் 'தலைவர்கள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள்' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.