
சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத் மற்றும் அவரது தம்பி மெஹர் அல்-அசாத் உள்ளிட்ட 9 பேருக்கு அந்த நாட்டு சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது.
2000 முதல் 2024 வரை ஆட்சியில் இருந்த அசாத், தனது காலத்தில் 15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் உட்பட பல அப்பாவி மக்களைக் கொன்று குவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தற்போது ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ள அசாத் உள்ளிட்ட 8 பேரைத் தவிர, டமாஸ்கஸ் சிறையில் உள்ள ராணுவ தளபதி அதெப் நஜிப்புக்கு விரைவில் தண்டனை நிறைவேற்றப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.