
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள லியானியுங்காங் நகரில் பொது பாதுகாப்பு மற்றும் காவல் துறை உபகரணங்களுக்கான கண்காட்சி தொடங்கியுள்ளது.
இந்தக் கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று, மனித உருவ ரோபோக்கள், ரோந்து நாய்கள் மற்றும் வெடிகுண்டு தடுப்பு ரோபோக்களை காட்சிப்படுத்தியுள்ளன.
காவல் துறையின் பல்வேறு பணிகளில் ரோபோக்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்த நவீன உபகரணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.