
JFW விருது வழங்கும் விழாவில் பேசிய நடிகை ஜோதிகா, தற்போதைய தமிழ் படங்களில் காதல் இல்லை, வெறும் காமம் மட்டுமே இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளாகத் தமிழ் சினிமாவில் அழகான காதல் திரைப்படங்கள் வரவில்லை என்றும், சூர்யாவுடன் இணைந்து நடிக்க நல்ல காதல் கதைகளுக்காகக் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு வெளியான ஸ்ரீகாந்த் மற்றும் சைத்தான் ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூலைப் பெற்று சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.